Thursday, October 14, 2004

அம்மாவின் 'HARD TALK' --- மற்றொரு கோணத்தில்!

பத்ரி, தனது வலைப்பதிவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்காணல் ('Hard Talk' with Karan Thapar in BBC) பற்றிய தனது 'எண்ணங்களை' சுவாரசியமாக வெளியிட்டிருந்தார்! அதைப் படித்தபோது, சரிந்திருக்கும் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த, அந்த நேர்காணலை 'அம்மா' சரியாக பயன்படுத்தத் தவறி விட்டாரோ எனத் தோன்றியது.

ஆனாலும், எனக்கென்னவோ நேர்காணலின் தொடக்கத்திலிருந்தே, கரண் தபார் சற்று அதிக 'aggressive' ஆக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றதாகவே தோன்றியது. ஒரு தேர்ந்த அனுபவமிக்க பத்திரிகையாளர், தனது STYLE-ஐ நேர்காணல் செய்யப்படும் நபரை பொறுத்து, மாற்றியமைத்து செயல்பட்டிருக்கலாமோ என்ற எண்ணமும் எழுந்தது. உதாரணத்துக்குச் சில:

1. 'Humiliating Defeat' என்ற சொல்லாக்கத்திற்கு பதிலாக 'Huge Defeat' என்பது, நேற்காணலை சுமுகமாகத் தொடங்க பெரிதும் உதவியிருக்கலாம்.
2. அதே போல், தபாரின் 'You are reading a statement' சற்று அனாவசியமாகவே தோன்றியது. படிக்க வந்ததை சற்று படிக்க விட்டு, பின்னர் குறுக்கிட்டிருக்கலாம்! இவ்வளவு அவசரம் காட்டியிருக்கத் தேவையில்லை!
3. அடுத்து, "So was it revenge? It was vengeance?" என்ற தபாரின் கேள்வி மிக அதிகம்!!! எந்த ஒரு அரசியல்வாதியும் இத்தகைய வினாவுக்கு 'ஆமாம்' என கூறப்போவதில்லை! ஆத்திரமூட்டுவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இத்தகைய கேள்வியில் இல்லை எனலாம்.
4. தபார் தனது ஒவ்வொரு கூற்றையும்/வினாவையும் "The Press says", "The press depict" போன்ற ஒட்டுதலோடு வெளிப்படுத்தியது சரியாகப் படவில்லை. பத்திரிகைத்துறை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு அரசாங்கத்தை நடத்த இயலாது! தற்போதுள்ள சூழலில், கட்சி சார்ந்த பத்திரிகையாளர்கள் பலர் உள்ளனர் என்பதே நிஜம்! You are confident that you can reach out to the people above the press and convince them of the real Jayalalitha? என்று தபார் கேட்டதற்கு, பத்திரிகைகளை படித்து விட்டு, அதன்படி மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்பதை ஓரு நகைச்சுவையான கருத்தாகத் தான் கொள்ளலாம்!!!
5. அடுத்து தபாரின் "Are you embarrassed by your belief in Numerology and Astrology?" என்ற வினாவும் தேவையற்ற ஒன்று. அவற்றை நம்புவதும் நம்பாததும் ஒருவரின் தனிப்பட்ட உரிமை என விட்டிருக்கலாம். அக்கேள்வியின் தொடர்ச்சியாக, தமிழக மக்கள் அனைவரும் "Numerology" மேல் நம்பிக்கை உள்ளவர்களாக மாறி விடக்கூடிய சாத்தியம் இருப்பது போல் ஒரு வினாவெழுப்பினார்!(As Chief Minister of Tamil Nadu, you set an example ...) Too Much!


அதற்காக தமிழக முதல்வரும், நேர்காணலில் பல கேள்விகளுக்கு சிறப்பாக பதிலுரைத்தார் என்றும் கூற முடியவில்லை :-(( மேற்கூறியவைகளை வைத்து நான் 'அம்மா' அபிமானி என்று முத்திரை குத்தி விடாதீர்கள்! நான் எப்போதும் என் வீட்டம்மாவின் அபிமானி மட்டுமே :-))

என்றென்றும் அன்புடன்
பாலா

8 மறுமொழிகள்:

அன்பு said...

நான் எப்போதும் என் வீட்டம்மாவின் அபிமானி மட்டுமே :-))பாலா,

உங்களை மாதிரி ஆட்கள் இருப்பதனால்தான் அங்க சுந்தருக்கு புரியாத புதிராயிருக்கிறது நெலமை.

ஹா..ஹா..ஹா..

அன்பு said...

மேற்கூறியவைகளை வைத்து நான் 'அம்மா' அபிமானி என்று முத்திரை குத்தி விடாதீர்கள்!மேற்கூறியவற்றிலிருந்து மட்டுமல்ல... உங்கள் வலைப்பதிவின் பெயரிலிருந்தே கூட எனக்குத்தெரியும் நீங்க 'அம்மா' அபிமானிதான் என்று:)

enRenRum-anbudan.BALA said...

அன்பு,
'அம்மு' என்று என் மகளை வீட்டில் (ஆசையாக) அழைப்போம். இது 'அம்மா' சம்பந்தப்பட்டது அல்ல என்று திட்டவட்டமாக அறிவிக்கிறேன் :-((
என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

அன்பு,
பின்னூட்டத்தில் ஒரு வலைப்பதிவுக்கு LINK (உதாரணத்துக்கு, உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் "சுந்தருக்கு" என்பதற்கு கொடுத்தது போல்) தருவது எப்படி? நான் S/W ஆள் கிடையாது! H/W designer :-(
என்றென்றும் அன்புடன்
பாலா

Desikan said...

Bala,

I think you are Amma's supporter as I see Green colour title in your blog :-)

- desikan

said...

என்ன ஓரு கற்பனை வளம்? 'அம்மா' அபிமானி முத்திரையை குத்தாமல் விட மாட்டீர்கள் போலுள்ளதே! என் செய்வேன், தாயே?
என்றென்றும் அன்புடன்
பாலா

Unknown said...

இதை விட மிகக்கடுமையாக கலைஞரிடம் ஈழ தமிழர் படுகொலை குறித்ததும் , Demonitization குறித்து மோடியுடனும் நேர்காணல் செய்தல் நன்று. உதாரணம் ஆவி அமுதா சன் டிவி கேள்வி பதில். அரசியல் தொழில் செய்வோர் அஞ்ச வேண்டும்

enRenRum-anbudan.BALA said...

//Duraisamy Elangovan said...
இதை விட மிகக்கடுமையாக கலைஞரிடம் ஈழ தமிழர் படுகொலை குறித்ததும் , Demonitization குறித்து மோடியுடனும் நேர்காணல் செய்தல் நன்று. உதாரணம் ஆவி அமுதா சன் டிவி கேள்வி பதில். அரசியல் தொழில் செய்வோர் அஞ்ச வேண்டும்
//
கருத்துக்கு நன்றி. கடுமையான பேட்டி என்றால், கடுமையாகப் பேசுதல் அன்று. கடுமையான, நுண்ணிய கேள்விகள் கேட்பது. அதற்கு ஒரு திறன் வேண்டும். ஆனால், ஒன்று உண்மை. நம் அரசியல்வாதிகளுக்கு சகிப்புத்தன்மை குறைவே, வெளிநாட்டு அ.வாதிகளை ஒப்பு நோக்குகையில்!

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails